NEWS :
TRBNEWS Welcomes You

07 October 2013

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

          Tamil Nadu PGA for the year 2012–2013

horizontal rule
  Generate Your Result
    Enter your Roll No. (eg.01010000) 
          (for all the candidates who have appeared for Examination)
                                   Roll No.         13PG *

                                                            
Please Allow Popup To Take PrintOut
Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
FINAL ANSWER KEY
 
Telugu Geography  
English Economics  
Mathematics Commerce  
Physics Political Science  
Chemistry Home Science
Botany Physical Education Director Grade I  
Zoology Micro - Biology  
History Bio - Chemistry

07 September 2013

ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் தேர்வு பெற வாய்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் கணிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் (8 சதவீதம் பேர்) தேர்ச்சி பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் அகில இந்திய அளவில் 77,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 10 சதவீத தேர்ச்சி ஆகும்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இந்த சட்டம் கடந்த 23.8.2010 முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மாநில அளவிலான முதல் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. லட்சக்கணக்கான ஆசிரியர் தேர்வு எழுதியதில் வெறும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

அப்போது தேர்வு நேரம் (1 ½ மணி) போதாது என்ற குற்றச்சாட்டை பெரும்பாலான ஆசிரியர்கள் முன்வைத்ததால் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு துணை ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி விகிதம் ஏறத்தாழ 3 சதவீதமாக உயர்ந்தது. ஆசிரியர் பணி காலி இடங்கள் உள்ள நிலையில், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காததால் கிட்டதட்ட 14 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்கள் காலியாக இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், 3-வது தகுதித்தேர்வு கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை 2 லட்சத்து 62 ஆயிரம் பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வினை 4 லட்சம் பேரும் ஆக மொத்தம் 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

அவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது பட்டதாரி ஆசிரியர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது.

தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதுதொடர்பான ஆவணங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் ஆவணங்களை அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து ஒவ்வொரு பாடத்திற்கும் 3 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் வினாக்களையும், விடைகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். நிபுணர் குழு அளிக்கும் முடிவின்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்த தகுதித்தேர்வில் 8 சதவீதம் பேர் அதாவது ஏறத்தாழ 53 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது.

முந்தைய தகுதித்தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த தகுதித்தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இரண்டிலும் சரி தமிழ் பாடத்தில் மட்டும் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக கருத்து எழுந்தது. கேள்விகள், விடைகள் தவறாக இருக்கும்பட்சத்தில் அவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நிபுணர் குழுவின் முடிவின்படி உரிய மதிப்பெண் வழங்கப்படும்.

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால்தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை அகில இந்திய அளவில் 7 ½ லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதி இருந்தனர். தேர்வு முடிவு 2-ந்தேதி வெளியானது. மொத்தம் 77 ஆயிரத்து 634 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது 10 சதவீத தேர்ச்சி, முந்தைய தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்து இருப்பதால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள். 

21 July 2013

ஆசிரியர் தகுதி தேர்வு மேல் முறையீடு: கருணாநிதி கண்டனம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சான்று சரிபார்ப்பு ஏற்கெனவே முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. இது மிகத் தவறான முடிவாகும்.ஆசிரியர்கள் எல்லாம் மன நிறைவு தரும் முடிவு என்று இந்தத் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் அரசு மேல் முறையீடு செய்தால், அது ஆசிரியர்களுக்கு எதிராக எடுத்த முடிவாகவே இருக்கும்.சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழில் வாதாட முதலில் அனுமதி மறுத்து, தற்போது மீண்டும் வாதாட நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இது தமிழுக்குக் கிடைத்த வெற்றி. இதற்காக முதலில் கோரிக்கை வைத்த வழக்குரைஞர் பகத்சிங், தமிழில் வாதாட அனுமதியளித்த நீதிபதி ஆகியோருக்கு நன்றி என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதுகலை ஆசிரியர் தேர்வு: 1.67 லட்சம் பேர் போட்டி

சென்னை: டி.ஆர்.பி., நடத்தும், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று (21ம் தேதி) நடக்கிறது. இதில், 1.67 லட்சம் பேர், பங்கேற்கின்றனர். ஒரு பணிக்கு, 58 பேர் வீதம், போட்டி போடுகின்றனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான போட்டித் தேர்வுக்கு, 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், ஆண்கள், 57,136 பேர்; பெண்கள்,1,09,864 பேர்.
மாற்றுத் திறனாளிகள், 8,506 பேரும், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 971 பேர், பார்வையற்றவர். மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை, மூன்று மணி நேரம், தேர்வு நடக்கிறது. 150 மதிப்பெண்களுக்கு, "அப்ஜக்டிவ்" முறையில், தேர்வு நடக்கிறது. தேர்வுப் பணியில், 11,770 பேரை, டி.ஆர்.பி., ஈடுபடுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்தில் மட்டும், 13,927 பேர் எழுதுகின்றனர். இவர்களில், ஆண்கள், 3,649 பேர்; பெண்கள், 10,278 பேர்; 543 பேர், மாற்றுத் திறனாளிகள். 55 மையங்களில், தேர்வு நடக்கிறது. பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, கூடுதலாக, அரை மணி நேரம் ஒதுக்கப்படும் எனவும், இவர்களுக்கு,வசதியாக தரைத் தளத்திலேயே, இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
"தேர்வு, ஒளிவு மறைவற்ற முறையில் நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி தெரிவித்துள்ளார். தேர்வர்கள், காலை, 9:30 மணிக்கு, தேர்வு அறையில் அமர வேண்டும் என, டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.
டி.ஆர்.பி., அதிகாரிகள், தேர்வை, தீவிரமாக கண்காணிக்க, முடிவுசெய்துள்ளனர். இதற்காக, பல அதிகாரிகள், மாவட்டங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கோவையில், டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் சவுத்ரி முகாமிட்டுள்ளார். உறுப்பினர் உமா, மதுரை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். உறுப்பினர் - செயலர் அறிவொளி, சென்னையில் இருந்தபடி, மாநிலம் முழுவதும், தேர்வுப் பணிகளை கண்காணிக்கிறார்.
தேர்வு முடிந்ததும், மாவட்ட வாரியாக, விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, சீலிடப்படும். பின்னர், அனைத்து விடைத்தாள்களும், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, "ஸ்கேன்" செய்யப்பட்டு, கம்ப்யூட்டர் மூலமாக மதிப்பீடு செய்து, தேர்வு முடிவு வெளியிடப்படும்.
கம்ப்யூட்டர் மூலமான மதிப்பீடு என்பதால், விடைத்தாள்கள், மிக விரைவாக மதிப்பீடு செய்யப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, ஆகஸ்ட், 15ம் தேதிக்குள், தேர்வு முடிவை எதிர்பார்க்கலாம்.
அதன்பின், தேர்வு பெறுபவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, தேர்வு பெற்றதற்கான உத்தரவை, டி.ஆர்.பி., வழங்கும். ஆகஸ்ட் இறுதிக்குள், 2,881 பேரையும், பணி நியமனம்செய்திட, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
ஒரு பணியிடத்திற்கு, 58 பேர் வீதம், போட்டி போடுகின்றனர். இதனால், திறமையானவர்கள் மட்டுமே, தேர்வில் வெற்றி பெற முடியும் எனவும், இவர்களால், சிறப்பான கல்வியை வழங்க முடியும் எனவும், டி.ஆர்.பி., நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வடமாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அதிகளவில், முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தேர்வு பெறும் ஆசிரியர்களில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தருமபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்.

12 May 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: "60% கட் ஆப் மதிப்பெண்ணை குறைக்க வாய்ப்பு இல்லை'

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண் 60 சதவீதம் என்பதைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் ஆர்.சுபா (கெங்கவல்லி) பேசியது:-
தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் (என்சிடிஇ) வழிகாட்டுதல்படி தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம் என தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாகக் கூறியுள்ளது.
அண்மையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாமல் பொதுத் தேர்வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குத் தனி கட்- ஆஃப் தரப்படவில்லை. இதனால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தோர் பாதிக்கப்படுகின்றனர்.
தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கான பணியிடங்களில் 40 சதவீதம் காலியாக உள்ளது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றாமல் பட்டதாரி ஆசிரியர் நியமித்ததை செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி, மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
எனவே, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்துக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது:-
பணித் தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.
மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம். எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை.
ஆர்.சுபா: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்போது பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், கடந்த காலமுறைப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரும் ஆசிரியருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவர்கள். அவர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.
அமைச்சர் வைகைச்செல்வன்: அரசின் கொள்கை முடிவின்படி அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை.

11 May 2013

மாணவர்கள் தரமான கல்வியைப்பெறும் வகையில் இந்த ஆண்டு 3711 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் சட்டசபையில், பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு

தொடக்கக்கல்வி, இடைநிலை மற்றும் மேல்நிலைக்கல்வி ஆகியவை சிறப்புடன் அமையவும், மாணவர்கள் தரமான கல்வியைப்பெறவும் இந்த ஆண்டு 3711 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்’’ என்று, சட்டசபையில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.
மானியக்கோரிக்கை விவாதம்
சட்டசபையில்  கேள்வி நேரம் முடிந்தம், பள்ளிக்கல்வி, விளையாட்டுகள், இளைஞர்நலம் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:–
மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கு
மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளும் தரமான கல்வி பெறும் வகையில், பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற குழந்தைகளுக்கு கற்பித்தல் முறையை எளிதாக்க சிறப்பு கல்வி உபகரணங்கள் அடங்கிய பையினை வழங்கப்படும்.இதன் மூலம் 2221 மாணவர்கள் பயன்அடைவார்கள். இதற்கான திட்டச்செலவு 18 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்.அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிக்கூடங்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு சுமார் 1½ லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
3711 ஆசிரியர்கள் நியமனம்
மாணவ–மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கும் வகையில், 2011–12 மற்றும் 2012–13–ம் ஆண்டுகளில் மொத்தம் 63,125 ஆசிரியர் பணியிடங்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒப்பளிப்பு செய்துள்ளார்.இதன் தொடர்ச்சியாகவும், தொடக்கக்கல்வி, இடைநிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி ஆகியவை சிறப்புடன் அமையவும், மாணவர்கள் தரமான கல்வியைப்பெறவும், இந்த ஆண்டு 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
ஆசிரியர் பணியிட விவரம் வருமாறு:–
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 314, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 380, முதுகலை ஆசிரியர்கள் 880, பட்டதாரி ஆசிரியர்கள் 1094, இடைநிலை ஆசிரியர்கள் 887, சிறப்பு ஆசிரியர்கள் 156 ஆக மொத்தம் 3711 ஆசிரியர்கள் ஆவார்கள்.
உதவியாளர்கள்
ஆசிரியர் சார்ந்த காலிபணியிடங்களை நிரப்பும் வகையில், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் 16, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் 2, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 99, மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உடற்கல்வி இயக்குநர்கள் பணியிடங்கள் 8 என மொத்தம் 125 ஆசிரியர் சார்ந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.கல்வித்துறையில், ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்புவது அவசியமாகிறது. எனவே, 850 உதவியாளர்கள் உள்பட மொத்தம் 1146 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.
ஆல்சு சாலை ‘தமிழ்ச்சாலை’ என பெயர் மாற்றம்
சென்னையில் தமிழ்வளர்ச்சி, கலைபண்பாட்டுத்துறை, தொல்லியல் துறை ஆகிய அலுவலகங்கள் அடங்கிய தமிழ் வளர்ச்சி வளாகம் அமைந்துள்ள ஆல்சு சாலைக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, ‘‘தமிழ்சாலை’’ என பெயர் சூட்டப்படும்.மேலும், சென்னையில் உள்ள கொலைகாரன்பேட்டை பெயர் மாற்றம் செய்யப்படும்.
ஆக்கி விளையாட்டு மைதானம்
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில், வருங்காலங்களில் நடைபெறவுள்ள பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள செயற்கை இழை வளைகோல்பந்து (ஆக்கி) ஆடுகளம் ரூ.3½ கோடியில் சீரமைக்கப்படும்.மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உடற்பயிற்சிக்கூட (ஜிம்) வசதிகளை மேம்படுத்தும் வகையில், முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.இதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் குரல் ஓட்டுமூலம் மானியக்கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக உறுப்பினர்கள் கங்கவல்லி ஆர்.சுபா (தே.மு.தி.க.), பாலக்கோடு கே.பி.அன்பழகன் (அ.தி.முக.), திண்டுக்கல் கே.பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), மணப்பாறை ஆர்.சந்திரசேகர் (அ.தி.மு.க.), சிவகங்கை சு.குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு), கிள்ளியூர் எஸ்.ஜான்ஜேக்கப் (காங்கிரஸ்), நாங்குனேரி ஏ.நாராயணன் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி), ஆம்பூர் ஏ.அஸ்லம் பாட்சா (மனிதநேய மக்கள் கட்சி), ஓட்டப்பிடாரம் டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), உசிலம்பட்டி பி.வி.கதிரவன் (அகில இந்திய பார்வர்டு பிளாக்), நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் (ஆங்கிலோ இந்தியன்–நியமன உறுப்பினர்) ஆகியோர் பேசினார்கள்.

09 May 2013

PG - TRB Notification

Advertisement No. 02/2013
Date of Notification : 9.5.2013
Sale of Application  : 31.5.2013
Last Date                : 14.6.2013
Date of Exam.         : 21.7.2013



06 May 2013

டி.இ.டி. தேர்வு அறிவிப்பு: அடுத்த வாரம் வெளியாகிறது

"ஆசிரியர் தகுதி தேர்வான, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும்" என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம், 22 ஆயிரத்து 500 பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்னும், 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.
அடுத்த தேர்வை நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், இது குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டைப்போல், ஜூலையில் தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், வலியுறுத்தினர். இது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார் என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்திருந்தார். எனவே, இதுதொடர்பாக, முதல்வரின் அறிவிப்பையும், பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

05 May 2013

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 32 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவு


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாமல் 32 பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்தது.
விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரத்தைச் சேர்ந்த ஜெயசாந்தி உள்ளிட்ட 32 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு 2010 ஏப். 1-இல் கொண்டு வந்தது.
அதற்கு முன்பே எங்களை ஆசிரியர்களாக பணிகளில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்பதல் அளித்தனர். இருப்பினும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால், எங்கள் பணி நியமனத்துக்கான ஒப்புதலை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஏற்க மறுத்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாத நிலை ஏற்பட்டால், ஓராண்டு காலத்தில் மத்திய அரசை, மாநில அரசு அணுகி தகுதியில் இருந்து விதிவிலக்கு பெறவேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு கோரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி டி. ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
மத்திய அரசின் சட்ட விதிப்படி படி, ஆசிரியர்களை பணியில் நியமிக்கமுடியாத நிலை ஏற்பட்டால், மாநில அரசு அதற்கான காலக்கெடுவுக்குள் விதிவிலக்கு கோரி விண்ணப்பித்து இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் இல்லாத நிலை ஏற்பட்ட போதும் அரசு அதற்காக மத்திய அரசை அணுகவில்லை. இந்தச் சூழ்நிலையில்  32 மனுதாரர்களையும் ஆசிரியர்களாக பணியில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததில் தவறு காணமுடியவில்லை. எனவே, 32 பேருக்கும் அதிகாரிகள் தாற்காலிக ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், அதற்கான ஊதியம் பெறுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும். இந்த 32 பேரும் 2015 மார்ச் 31-க்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களை நீக்கம் செய்து தகுதியானவர்களை நியமிக்கலாம். மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு அவ்வப்போது தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை ஜூன் 6-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

04 May 2013

டி.இ.டி., தகுதி மதிப்பெண்களை குறைக்க வலியுறுத்தல்

சென்னை: "ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), குறைந்தபட்ச மதிப்பெண்களை குறைப்பது தொடர்பான கோரிக்கையை, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்" என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசியதாவது: ஆசிரியர் தகுதி தேர்வில், இட ஒதுக்கீட்டு முறையை, சரியாக அமல்படுத்தவில்லை. டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.
இதனால், 45 சதவீத மதிப்பெண்கள் எடுக்கும் ஆதி திராவிட தேர்வர்கள், 58 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள், தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. பல மாநிலங்களில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும், தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: இந்த கோரிக்கை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அவர், உரிய முடிவை எடுத்து அறிவிப்பார்.
பாலபாரதி - மார்க்சிஸ்ட்: இதுவரை, இரு முறை, டி.இ.டி., தேர்வுகள் நடந்தபோதும், போதிய அளவிற்கு, ஆசிரியர் தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது. இதை உணர்ந்து, இந்த பிரச்னையில், தமிழக அரசு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி: தகுதி மதிப்பெண்கள் அளவை குறைப்பதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது, ஆர்.டி.இ., சட்டத்திலேயே, தெளிவாக கூறப்பட்டு உள்ளது. எனவே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைத்தால், அதிகமான தேர்வர்களை, ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய முடியும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

02 May 2013

புத்தகம் இன்றி 2011, ஆசிரியர் இன்றி 2013 தமிழகத்தில் பள்ளிக்கல்விக்கு பாதிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படாததால், வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் ஓரளவு தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழும் தமிழகத்தில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு தமிழ் வழிக்கல்வி முறை பின்தங்கிவிட்டது. இதை சரிசெய்ய சமச்சீர் கல்வி முறையை கடந்த ஆட்சியில் அமலாக்கினர். ஆனால், கடந்த 2011ல் சமச்சீர் கல்விக்காக அச்சிடப்பட்ட புத்தகங்கள் கைவிடப்பட்டு புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதனால் சுமார் 3 மாதங்கள் பிள்ளைகள் பள்ளி சென்று படிக்காமல், விளையாடியும் ஊர் சுற்றியும் பொழுதை போக்கினர். பல பள்ளிகளில் பாடம் நடத்தாமலேயே ஒப்புக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர் காலி பணியிடங்கள் சுமார் 20 ஆயிரம் உள்ளன. இம்மாதம் கூடுதலாக சில ஆயிரம் பணியிடங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க முடியாதவாறு ஆசிரியர் தகுதி தேர்வு தடையாக உள்ளது. கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அதிகமில்லாத வடமாநிலங்கள் சிலவற்றில் கல்லூரி கல்வியை முடித்த வேகத்தில் பலரும் ஆசிரியரானதால், தகுதி தேர்வை மத்திய அரசு அமலாக்கியது. இத்திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் எதிர்ப்பை மீறி 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி அடையாததால் மறு தேர்வு நடத்தப்பட்டது. அக்டோபரில் நடந்த இத்தேர்வில் வென்றவர்களை டிசம்பரில் நியமித்தனர். இதனால் பாடம் நடத்தும் பணி பாதிப்படைந்தது.

சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்க உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் அல்லது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கூறுகையில், ‘தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆசிரியர் பணியோடு ஆசிரியர் அல்லாத அலுவலக பணிகளையும் செய்ய வேண்டிய பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யா விட்டால் சிக்கல் ஏற்படும். அதுவும் ஈராசிரியர் பள்ளிகளில் ஒரு இடம் காலியாகி ஓராசிரியர் பள்ளி ஆனால் சிரமம் தான்‘ என்றார்.  இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், ‘ வழக்கமான பணியிடங்கள் தவிர ஆர்ம்எஸ்ஏ, எஸ்எஸ்ஏ, தகுதி உயர்த்திய பள்ளி பணியிடங்களையும் சேர்த்தால் இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் தேவை. இதை முந்தைய முறையில் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் உரிய காலத்தில், அதாவது ஜூன் முதல் ஆகஸ்டுக்குள் நிரப்பவேண்டும்’ என்றார். கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே ஆசிரியர் நியமனம் நடந்தால் தான் திட்டமிட்டு, கால அட்டவணை போட்டு பாடம் நடத்தி முடிக்க முடியும். அதுவும்  கலந்தாய்வு முடிந்த பிறகு ஆசிரியர்களை நியமனம் செய்வதே நல்லது என்று ஆசிரியர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.

27 April 2013

வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்: ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். இதுகுறித்து நடந்த விவாதம்:-
ஏ.லாசர் (மார்க்சிஸ்ட்): ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு முறையை அமலுக்கு கொண்டு வரவேண்டும். மத்திய அரசு தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் ஆகியோருக்கு, தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தனித்தனி மதிப்பெண்களை தீர்மானித்துள்ளது.
ஆந்திரத்தில்கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகபட்ச இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர். அங்கு முற்பட்ட வகுப்பினருக்கு 60 சதவீத மதிப்பெண், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத மதிப்பெண், தாழ்த்தப்பட்டோர்- பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40 சதவீத மதிப்பெண் என தகுதி மதிப்பெண்கள் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆனால், தமிழகத்தில் அனைவருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் சாசன உரிமையான இட ஒதுக்கீடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன்: ஆசிரியர் தகுத்தேர்வு என்பது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு. ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனை பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனை பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்
படுகின்றனர்.
அ.சவுந்தரராசன் (மார்க்சிஸ்ட்): வேறு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு தகுதி மதிப்பெண்கள் குறைவாக உள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் நிர்ணயிக்க
வேண்டும்.
தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும் அதிகமாக ஒருவர் பெற்றால் அவரை பொதுப்பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை.
அவரை இட ஒதுக்கீட்டிற்குள் வைக்காமல் பொதுப் பிரிவுக்கு கொண்டு சென்றால், இட ஒதுக்கீட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஒன்றிரண்டு இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
வங்கி போன்ற தேர்வுகளில் ஒதுக்கீட்டில் உள்ளவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றால் அவர்கள் ஒதுக்கீட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நடைமுறையை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்.
உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன்: இந்தப் பிரச்னை முதல்வரின் பரிசீலனையில் உள்ளது என்றார்.